தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகேஅடுத்தடுத்து 15 வாகனங்கள் மோதி விபத்து 4 பேர் உயிரிழப்பு

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே அடுத்தடுத்து 15 வாகனங்கள் மோதி பயங்கர விபத்தில் சிக்கியுள்ளது. இதில் 4 பேர் உயிரிழந்தனர்.
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகேஅடுத்தடுத்து 15 வாகனங்கள் மோதி விபத்து 4 பேர் உயிரிழப்பு
Published on

தர்மபுரி

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கண்வாய் சரிவுப்பாதையில் இருசக்கர வாகனம் மற்றும் மினிலாரி மோதி சிறிய விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அச்சாலையில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றுள்ளன. அப்போது சிமெண்ட் மூட்டைகளுடன் வேகமாக வந்த கனரக லாரி ஒன்று அணிவகுந்து நின்ற வாகனங்கள் மீது அதேவேகத்தில் மோதியது.

அப்பகுதி சரிவான சாலை என்பதால் 12 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கியது. சுமார் 5 கார்கள் நொருங்கி பெரியளவில் சேதமாயின. இதனால் காரில் இருந்தவர்கள் அலறினர். அங்கிருந்த வாகன ஓட்டிகள் காயத்துடன் காரில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். விபத்தி 3 பேர் சம்பவ இடத்தில் பலியானார்கள். பலர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒருவர் உயிரிழந்ததையடுத்து உயிரிழப்பு 4ஆக அதிகரித்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com