உடல் நலக்குறவால் மரணமடைந்த கத்ரி கோபால்நாத் உடல் அடக்கம் - நளின்குமார் கட்டீல் நேரில் அஞ்சலி

உடல் நலக்குறைவால் மரணமடைந்த கத்ரி கோபால்நாத்தின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. இதில் நளின் குமார் கட்டீல் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
உடல் நலக்குறவால் மரணமடைந்த கத்ரி கோபால்நாத் உடல் அடக்கம் - நளின்குமார் கட்டீல் நேரில் அஞ்சலி
Published on

மங்களூரு,

கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்தவா கத்ரி கோபால்நாத். சாக்சபோன், இசை கருவி வாசிப்பு மூலம் உலக புகழ் பற்றவர். இவா மங்களூருவில் வசித்து வந்தார். உடல் நலக்குறைவு காரணமாக அவர் கடந்த 11-ந்தேதி காலை 4 மணி அளவில் மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 70.

சாக்சபோன் இசைப்பதில் சிறந்து விளங்கிய இவர், மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது, மத்தி இசை நாடக அகடாமி விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது, கர்நாடக கலாஸ்ரீ உள்பட பல்வேறு விருதுகளை அவர் பெற்றுள்ளார்.

கத்ரி கோபால்நாத்தின் உடல் நேற்று முன்தினம் அஞ்சலிக்காக மங்களூருவில் வைக்கப்பட்டிருந்தது. பின்னர் நேற்று காலை அவருடைய உடல் ஊர்வலமாக சொந்த ஊரான பண்ட்வால் தாலுகா சஜிப மொத்தகெரே கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வைத்து கத்ரி கோபால்நாத்தின் உடலுக்கு இறுதிச்சடங்கு நடந்தது.

இதில், கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் நளின் குமார் கட்டீல், முன்னாள் மந்திரி ரமாநாத் ராய், கலெக்டர் சிந்து ரூபேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். நளின் குமார் கட்டீல் அவருடைய உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து, போலீஸ் மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க கத்ரி கோபால்நாத்தின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com