பாழடைந்த கிணற்றை மூடக்கோரி, உதவி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு

பாழடைந்த கிணற்றை மூடக்கோரி கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
பாழடைந்த கிணற்றை மூடக்கோரி, உதவி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு
Published on

கோவில்பட்டி,

கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி ஊராட்சி பழத்தோட்ட நகரை சேர்ந்த கிராம மக்கள் நேற்று காலையில் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரகுபதியிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், இலுப்பையூரணி ஊராட்சி பழத்தோட்ட நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.

எங்கள் தெருவுக்கு மேற்கு பக்கத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் பெருமாள் நகர் மற்றும் சண்முகாநகரில் இருந்து வரும் கழிவுநீர் கலக்கிறது. இதனால் எங்கள் பக்கத்து தெருவில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் தண்ணீருடன் சாக்கடை நீர் கலந்து வருகிறது.

இந்த கிணற்றில் பல முதியோர் விழுந்து இறந்து உள்ளனர். அடிக்கடி கால்நடைகளும் உள்ளே விழுந்துவிடுகின்றன. கிணற்றில் கழிவுநீர் நிறைந்து இருப்பதால் யாராவது தவறி விழுந்தால் காப்பாற்ற முடியாத நிலை உள்ளது. எனவே, இந்த பகுதி மக்களை பாதுகாக்க உடனடியாக இந்த கிணற்றை மூடி சுகாதார சீர்கேடு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிஇருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com