

ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை நகராட்சி பாலாற்றங்கரையில் சுமார் 300 ஆண்டு பழமையான தேசிங்கு ராஜா மற்றும் ராணிபாய் ஆகியோர் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை என்று பெயர் வருவதற்கு காரணமாக இருந்த இந்த நினைவிடத்தை செய்தி மக்கள் தொடர்பு இயக்குனர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், ராணிப்பேட்டை உதவி கலெக்டர் பூங்கொடி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அசோக், வாலாஜா தாசில்தார் ஆனந்தன், ராணிப்பேட்டை நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.