தஞ்சையில் 3 நாட்கள் ஆயுதப்படை போலீசார் 200 பேருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி

தஞ்சையில் 3 நாட்கள் ஆயுதப்படை போலீசார் 200 பேருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் 4 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
தஞ்சையில் 3 நாட்கள் ஆயுதப்படை போலீசார் 200 பேருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி
Published on

தஞ்சாவூர்,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையயொட்டி பேரிடர் காலத்தில் மீட்பு பணிகளில் ஈடுபடுவது தொடர்பாக போலீசாருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தஞ்சையில் ஆயுதப்படை போலீசார் 200 பேருக்கு 3 நாட்கள் சென்னையில் உள்ள அதிவிரைவுப்படையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் பயிற்சி பெற்ற 8 போலீசார் பயிற்சி அளிக்கிறார்கள். இ்ந்த பயிற்சி நேற்று தொடங்கியது.

இந்த பயிற்சி தஞ்சை டி.ஐ.ஜி. லோகநாதன், போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் ஆகியோர் மேற்பார்வையில் நடக்கிறது. இந்த பயிற்சியில் தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள ஆயுதப்படையை சேர்ந்த தலா 50 போலீசார் கலந்து கொண்டுள்ளனர்.

பாதுகாப்பு உபகரணங்கள்

பேரிடர் காலத்தில் ஏற்படும் மின் விபத்து, மரம் விழுந்து ஏற்படும் விபத்து, தண்ணீரில் மூழ்கியவர்களை காப்பாற்றுவது எப்படி, கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பது எப்படி என்பது தொடர்பாக பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் பேரிடர் மீட்பு காலங்களில் பாதுகாப்பு உபகரணங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியை நேற்று தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் நேரில் பார்வையிட்டார்.

இதற்கான ஏற்பாடுகளை தஞ்சை ஆயுதப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகேசன், இன்ஸ்பெக்டர் தவச்செல்வம் மற்றும் போலீசார் செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com