

ஈரோடு,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதில் பெரிய வாகனங்கள் மூலமாக முக்கிய வீதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் தீயணைப்பு வாகனங்கள் மூலமாக ஈரோடு சத்திரோடு, பன்னீர்செல்வம் பூங்கா, நேதாஜி ரோடு, மணிக்கூண்டு உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதேபோல் போலீஸ் வாகனங்களும் கிருமி நாசினி தெளிக்க பயன்படுத்தப்படுகிறது.