கொரோனா விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியோகம்

பெரியகுளம் அருகே கொரோனா விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.
கொரோனா விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியோகம்
Published on

பெரியகுளம்:

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் உத்தரவின்பேரில், பெரியகுளம் அருகே உள்ள வடுகப்பட்டி பேரூராட்சியில் கொரோனா 3-வது அலை பரவலை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதனையொட்டி வடுகப்பட்டியின் முக்கிய வீதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. மேலும் முக கவசம் அணிவது குறித்தும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது குறித்தும் வார்டு வாரியாக சென்று ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் கை கழுவும் முறைகள் பற்றிய செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேரூராட்சி அலுவலகத்தில் வியாபார சங்கத்தினர் மற்றும் சில்லரை வியாபாரிகள், வணிக நிறுவன உரிமையாளர்கள், கடை உரிமையாளர்கள் ஆகியோர்களுக்கு தொற்று பரவாமல் தடுப்பது குறித்தும், சமூக இடைவெளியை கடைபிடிப்பது குறித்தும் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகளுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் அம்புஜம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சுகாதார மேற்பார்வையாளர் சுப்புராஜ், பணியாளர் முருகன், சுகாதார ஆய்வாளர் ரங்கராஜ் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com