திருவள்ளூர் பஸ் நிலையத்தில் மாவட்ட கலெக்டர் ஆய்வு

திருவள்ளூர் மாவட்டத்தில் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி அளித்துள்ள நிலையில், திருவள்ளூர் பஸ் நிலையத்தில் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
திருவள்ளூர் பஸ் நிலையத்தில் மாவட்ட கலெக்டர் ஆய்வு
Published on

பஸ்கள் இயங்க அனுமதி

தமிழக அரசு மேற்கொண்ட சீரிய நடவடிக்கையின் காரணமாக தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது குறைந்து வருகிறது. தமிழகம் முழுவதும் வருகிற 28-ந்தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ள போதிலும், சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து இயங்க நேற்று முதல் அனுமதி அளித்துள்ளது.இதைதொடர்ந்து நேற்று திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்து ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருத்தணி, அரக்கோணம், பூந்தமல்லி போன்ற பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டது.இதனை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கலெக்டர் அறிவுரை

அதைத்தொடர்ந்து பஸ் நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த பஸ்சில் ஏறிய கலெக்டர், பயணிகளிடம் முக கவசங்கள் அணிந்து சமூக விதிகளை கடைப்பிடித்து பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் கலெக்டர் அங்கிருந்த பழக்கடைகளுக்கு சென்று வியாபாரிகளிடம் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக

கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அவருடன் திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சந்தானம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com