தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்

தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அரியலூர் மாவட்ட அளவிலான ஒருங் கிணைப்பு குழுக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்
Published on

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினவ்குமார் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் அரியலூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:-

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஆரம்பித்ததை தொடர்ந்து ஒருங்கிணைப்பு குழுக்கள் இணைந்து செயல்படுவதற்கு அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளும் மேற்கொள்ள அனைத்துத் துறை அலுவலர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது. இதில் தென்மேற்கு பருவமழை பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய இடங்களை முன்கூட்டியே கண்டறியப்பட வேண்டும். பாதிப்புக்குள்ளாகும் இடங் களிலிருந்து பொதுமக்களை மீட்பதற்கு தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகளான வாகன போக்குவரத்து, படகு போக்குவரத்து போன்றவைகள் முன்கூட்டியே தயார் நிலையில், வைத்திருக்க அறிவுருத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக தங்கிட அரசு பொதுக்கட்டிடங்கள் கழிவறை வசதியுடன் தயார் நிலையில் வைத்திருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆற்றுப் பாலம் கட்டிடங்கள், ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் போன்றவைகளில் வெள்ளப்பெருக்கின்போது உடைப்புகள் ஏற்படுவதை தடுக்க முன்கூட்டியே தடுத்திடும் நோக்கில் மணல் மூட்டைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் தயார் படுத்தி இருக்க வேண்டும்.- மழை காலங்களில் மின்சாரம் தடையில்லாமல் கிடைத்திடவும், மின்மாற்றிகள் பழுதுகள் ஏற்பட்டால் உடனடியாக மாற்றிட தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அதிகாரிகள் எடுத்திட வேண்டும். இக்காலங்களில் தொற்று நோய்கள் பரவாமல் தடுத்திட போதிய மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும். இடர்பாடு காலங்களில் கருத்து வேறு பாடின்றி அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங் கிணைந்து துயர்துடைப்பு மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபடுவதுடன் பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீயணைப்பு துறையின் சார்பில் மழைக்காலங்களில் வெள்ளத்தில் சிக்கிக்கொள்ளும் பொதுமக்களை மீட்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தீவிபத்து ஏற்படும் பொழுது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டிட இடிபாடுகள், விஷவாய்வு ஏற்படும் பொழுது செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஒத்திகை செய்முறை விளக்க பயிற்சிகள் தீயணைப்புத்துறை அலுவலர்கள் செய்து காட்டினர். இதை மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி பார்வையிட்டார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி கணேசன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பழனிசாமி, அனைத்து வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அனைத்துத்துறை உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com