மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டு போட்டிகள் திரளான மாணவ- மாணவிகள் பங்கேற்பு

கரூரில் நடந்த மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டு போட்டிகளில் திரளான மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினர்.
மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டு போட்டிகள் திரளான மாணவ- மாணவிகள் பங்கேற்பு
Published on

கரூர்,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கரூர் மாவட்ட பிரிவின் சார்பாக நடப்பாண்டு ஜூலை மாதத்திற்கான மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டு போட்டிகள் கரூர் தாந்தோன்றிமலை விளையாட்டரங்கில் நேற்று நடந்தது. போட்டிகளை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி சாந்தி தொடங்கி வைத்தார். இதில் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து வரும் மாணவ- மாணவிகள் திரளானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதில் தடகளத்தில் 100, 400, 800, 5,000 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகள் மாணவர்களுக்கும், 100, 200, 1,500, 3,000 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல் ஆகிய போட்டிகள் மாணவிகளுக்கும் என தனித்தனியாக நடத்தப்பட்டது. குழு போட்டிகளில் கைப்பந்து, கோ-கோ ஆகிய போட்டிகள் நடைபெற்றன.

திலகவதி, சந்திரா, பூங்கொடி, ரவிசந்திரன், பிரபுதாஸ் உள்ளிட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் நடுவர்களாக செயல்பட்டு போட்டிகளை நடத்தி வெற்றியாளர்களை தேர்வு செய்தனர். பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவின்போது மாதாந்திர போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது. தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் பயிற்சி எடுத்து வரும் மாணவ- மாணவிகள் தங்களது திறமையை வெளிப்படுத்துவதோடு அடுத்த கட்டத்திற்கு முன்னேற இந்த போட்டிகள் பயனுள்ளதாக இருக்கும். இதனால் போட்டி முடிந்ததும் வீரர், வீராங்கனைகளுக்கு ஆட்டத்திறனை மேம்படுத்துவது குறித்து உரிய ஆலோசனைகளும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com