தீபாவளி முன்பணம் கேட்டு போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்

தீபாவளி முன்பணம் வழங்க வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் நேற்று அதிகாலையில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தீபாவளி முன்பணம் கேட்டு போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
Published on

தேனி,

தீபாவளி பண்டிகை வருகிற 27-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் தங்களுக்கு தீபாவளி முன்பணம் மற்றும் ஊக்கத்தொகையை (போனஸ்) வழங்க அரசு தாமதம் செய்து வருவதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

தீபாவளி முன்பணம், ஊக்கத்தொகையை உடனே வழங்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் நேற்று அதிகாலையில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி, தேனி மாவட்டத்தில், பழனிசெட்டிபட்டி, தேவாரம், போடி, கம்பம் ஆகிய போக்குவரத்து பணிமனை முன்பு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் நேற்று அதிகாலை 5 மணியளவில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பழனிசெட்டிபட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு எல்.பி.எப். தொழிற்சங்க கிளை தலைவர் பரசுராமன் தலைமை தாங்கினார். போடியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு எல்.பி.எப். தொழிற்சங்க கிளை தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின்போது, தீபாவளி முன்பணம் மற்றும் ஊக்கத்தொகை இன்னும் வழங்காத அரசை கண்டித்தும், உடனே வழங்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இதனால், அதிகாலை நேரத்தில் இயக்க வேண்டிய பஸ்கள் போக்குவரத்து பணிமனைகளில் இருந்து சற்று தாமதமாக புறப்பட்டுச் சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com