தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கரூர் காமராஜ் மார்க்கெட்டில் புதிய வணிக வளாகம் கட்டப்படும்; வி. செந்தில் பாலாஜி வாக்குறுதி

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கரூர் காமராஜ் மார்க்கெட்டில் புதிய வணிக வளாகம் கட்டப்படும். கரூர் தொகுதியில் புதிய உழவர் சந்தைகள் துவங்கப்படும் என வி.செந்தில் பாலாஜி வாக்குறுதி அளித்தார்.
கரூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க.. வேட்பாளர் வி.செந்தில் பாலாஜி
கரூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க.. வேட்பாளர் வி.செந்தில் பாலாஜி
Published on

உற்சாக வரவேற்பு

கரூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க.. வேட்பாளர் வி.செந்தில் பாலாஜி கரூர் மத்திய கிழக்கு நகரத்திற்கு உட்பட்ட 11, 12, 20, 21, வார்டுகளிலும் மற்றும் ஆண்டாங்கோவில் கீழ்பாகம், மேல்பாகம் ஊராட்சிப் பகுதிகளில் வீடு, வீடாக நடந்து சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது அவர் பேசியதாவது:-

காமராஜ் மார்க்கெட்டில் புதிய வணிக வளாகம் கரூர் நகராட்சி பகுதியில் உள்ள பழுதடைந்த பழைய காமராஜ் மார்க்கெட்டை நவீன வசதிகளுடன் புதிய வணிக வளாகம் கட்டப்படும். மேலும் கரூர் தொகுதியில் புதிய உழவர் சந்தைகள் துவங்கப்படும். கரூரில் இயங்கிவரும் இ.எஸ்.ஐ. மருத்துவமனையை தரம் உயர்த்தி தொழிலாளர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். சர்ச் கார்னர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் உள்ளது. அந்த சாலையை விரிவாக்கம் செய்யப்பட்டு போக்குவரத்து சீர் படுத்தப்படும். கரூர் சட்டமன்றத் தொகுதியில் ஆண்டுக்கு ஒரு முறை இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு தேவைப்படுபவர்களுக்கு மேல் சிகிச்சைக்கு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். கேன்சர் போன்ற நோய்களுக்கு மருந்துகள் பெற சலுகை விலை மருந்தகங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் சேலத்தில் இருந்து சென்னை செல்லும் சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் கரூர் ஜங்ஷனிலிருந்து சேலம் வழியாக சென்னை செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com