

செம்பட்டு,
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிக்கு ஏப்ரல் 2-ந் தேதி ராம நவமியன்று அடிக்கல் நாட்டப்படவுள்ளது. தற்போது கோவில் கட்டுமானத்திற்கு தேவையான பணிகள் நடந்து வருகின்றன. இன்னும் 2 ஆண்டுகளுக்குள் கோவில் கட்டுப்பட்டு, திறப்பதற்கு தயாராகிவிடும். காசிவிஸ்வநாதர் கோவிலை உடைத்து அவுரங்கசீப் காலத்தில் மசூதி ஏற்படுத்தப்பட்டது. அதற்கு மாற்றம் கொண்டு வரவேண்டும். மீண்டும் காசி விஸ்வநாதர் கோவில் ஏற்படுத்த வேண்டும் என்று சன்னியாசிகள் சார்பில் புதிதாக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு நான் தலைமை ஏற்கிறேன். நாங்கள் சட்டரீதியாக அதனை எதிர்கொள்வோம். பாபர் மசூதி போல் அராஜகமாக எடுக்க மாட்டோம்.
2021-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தோற்கடிக்கப்பட வேண்டும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்வோம். பிரசாந்த் கிஷோர் யார் என்று எனக்கு தெரியாது. யெஸ் வங்கி ஆலோசகராக ஜேபி மோர்கன் இருந்தும், அந்த வங்கி மீட்க முடியாத நிலையில் உள்ளது. அதுபோல் தி.மு.க.விற்கும் நடைபெறும். சசிகலாவுக்கு நிறைய அனுபவம் உள்ளது. ஒரு சமுதாயம் ஒற்றுமையுடன் அவர் பின்னால் உள்ளது. கட்சி நடத்துவதற்கு அவருக்கு திறமை உண்டு. அதனால் மாற்றம் வரும். சசிகலாவை அ.தி.மு.க.வில் இணைப்பதற்கான முயற்சி செய்வது என்னுடைய பணி இல்லை. அவர் அ.தி.மு.க.வில் தானே இருக்கிறார். அது அவர்களின் உட்கட்சி பிரச்சினை. அதில் நான் தலையிட முடியாது.
கடல் நீரை குடிநீராக மாற்றி...
ரஜினிகாந்தின் ஏமாற்றம் குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும். நான் அவரிடம் பேசியது இல்லை. விவசாயிகள் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்துவது நல்ல விஷயம்தான். அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். கடல் நீரில் இருந்து உப்புத்தன்மையை நீக்கி, குடிநீராக மாற்றி மக்களுக்கு வழங்க வேண்டும். அதன்பிறகு ஹைட்ரோ கார்பன் திட்டம் போன்றவற்றை பற்றி பார்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.