லால்குடி தொகுதி புள்ளம்பாடி ஒன்றியத்தில் தி.மு.க. வேட்பாளர் சவுந்தரபாண்டியன் தீவிர வாக்கு சேகரிப்பு

லால்குடி தொகுதி புள்ளம்பாடி ஒன்றியத்தில் தி.மு.க. வேட்பாளர் சவுந்தரபாண்டியன் தீவிர வாக்கு சேகரித்தார்.
தி.மு.க. வேட்பாளர் சவுந்தரபாண்டியன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது
தி.மு.க. வேட்பாளர் சவுந்தரபாண்டியன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது
Published on

லால்குடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் சவுந்தர பாண்டியன் புள்ளம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட காட்டூர், அகலங்கநல்லூர், பூவாளூர், பெருவளநல்லூர், குமுளூர், புஞ்சை சங்கேந்தி, நஞ்சை சங்கேந்தி, ராமநாதபுரம், வெள்ளனூர் கிழக்கு, வெள்ளனூர் மேற்கு, இருதயபுரம், வெங்கடாசலபுரம் உள்ளிட்ட கிராமங்களில் நேற்று வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், தமிழகம் தலை நிமிர, மதசார்பற்ற அரசு அமைய, குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் உள்ளிட்ட அனைத்து மத சாதியினரும் கடந்த காலங்களில் தி.மு.க. ஆட்சியில் அனைத்து வசதிகளையும் பெற்று வந்தனர். தொடர்ந்து தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் அனைத்து கிராமங்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் அமைய பாடுபடுவேன். நல்லாட்சி அமைந்திட பொதுமக்கள் தி.மு.க.வை ஆதரிக்க வேண்டும் என்றார். அவருக்கு அனைத்து கிராமங்களிலும் மாலை, பொன்னாடை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரசாரத்தின் போது, மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, ஒன்றிய செயலாளர் செல்வராசா, புள்ளம்பாடி ஒன்றிய பெருந்தலைவர் ரசியா கோல்டன் ராஜேந்திரன், துணை பெருந்தலைவர் கனகராஜ், பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன் காங்கிரஸ் வட்டாரதலைவர் அர்ச்சுனன், கம்யூனிஸ்டு நிர்வாகிகள் சந்திரன், ரஜினிகாந்த், விடுதலைசிறுத்தைகள் விடுதலை இன்பன், தி.மு.க. கிளை நிர்வாகிகள் சங்கேந்தி சுந்தர்ராஜன், ராதா வெள்ளனூர் சரவணன், ஆனந்தன், ஊராட்சி தலைவர்கள் குறிச்சி பழனிசாமி, மார்டின் குழந்தைராஜ் உள்ளிட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com