

அப்போது அவர் பொதுமக்கள் மத்தியில் பேசுகையில், கடந்த 2006-ம் ஆண்டு ஆளும் கட்சி எம்.எல்.ஏ. ஆக இருந்தேன். அப்போது பொதுமக்கள் கோரிக்கைகள் அத்தும் தி.மு.க. அரசு மூலம் எளிதில் நிறைவேற்ற முடிந்தது. இதனையடுத்து 2011, 2016-ம் ஆண்டுகளில் தொடர்ந்து கடந்த இரண்டு முறையும் லால்குடி சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் எனக்கு வாக்களித்து தேர்ந்தெடுத்தனர். ஆனால் எதிர்க்கட்சியாக இருப்பதால் எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பணிகளை செய்தேன். மேற்கொண்டு பல கோரிக்கைகள் நான் எதிர்க்கட்சியாக இருப்பதால் ஆளும் அ.தி.மு.க. அரசு அதனை நிராகரித்து விட்டது. தற்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நகர் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்படும், மேலும் நடுநிலைப்பள்ளி தரம் உயர்த்தப்பட்டு உயர்நிலைப் பள்ளியாகவும், லால்குடி தொகுதியில் உயர்நிலைப்பள்ளி தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளாகவும் மாற்றி அமைக்கப்படும் என உறுதி அளித்து வாக்கு சேகரித்தார்.
பிரசாரத்தின் போது ஒன்றிய செயலாளர்கள் தமிழ்ச்செல்வன், ரவிச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர் துரை கந்தசாமி, காங்கிரஸ் கட்சி வட்டாரத் தலைவர் சுகுமார், நகர செயலாளர் துரைமாணிக்கம், நகர் ஊராட்சி நிர்வாகிகள் பரமேஸ்வரன், அமுல், ஆல்பர்ட், சின்னப்பன், அகஸ்டின், ஸ்டீபன்ராஜ், ராஜ்குமார், ராஜேந்திரன், பார்த்திபன், ஆரோக்கியதாஸ் உள்பட கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் உடனிருந்தனர்.