தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம்

மேலக்கடையநல்லூர் கடகாலீஸ்வரர் கோவில் முன்பு தி.மு.க. மாநில வர்த்தகர் அணி சார்பில் ‘அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம்’ என்ற தலைப்பில் மக்கள் கிராமசபை கூட்டம் நடந்தது.
தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம்
Published on

வாசுதேவநல்லூர்,

மேலக்கடையநல்லூர் கடகாலீஸ்வரர் கோவில் முன்பு தி.மு.க. மாநில வர்த்தகர் அணி சார்பில் அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் மக்கள் கிராமசபை கூட்டம் நடந்தது. மாநில வர்த்தகர் அணி துணை தலைவர் எஸ்.அய்யாத்துரை பாண்டியன் தலைமை தாங்கி, பேசினார். தொடர்ந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 1,000 ஏழை, எளிய மக்களுக்கு இலவச வேட்டி-சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில் 22-வது வார்டு செயலாளர் அண்ணாதுரை, பொதுக்குழு உறுப்பினர் காசிதர்மம் துரை, மாவட்ட பிரதிநிதி ராமச்சந்திரன், செங்கோட்டை ஒன்றிய செயலாளர் ரவிசங்கர், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் ஈஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com