

கன்னிவாடி,
இவர் அந்த தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆத்தூர் தொகுதிக் குட்பட்ட கிராமங்களில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரசாரம் செய்து வருகிறார். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் தொகுதிக்கு வேண்டிய அனைத்து அடிப்படை வசதிகள் செய்துதரப்படும் என தெரிவித்தார். வாக்கு சேகரிக்க சென்ற கிராமங்களில் பெண்கள் உற்சாகத்துடன் பாட்டுப்பாடி வரவேற்றனர்.
பிரசாரத்தின் போது அவர் கூறியதாவது:-
தற்போது இருக்கும் 100 நாள் வேலைத்திட்டத்தை தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் 150 நாட்கள் வேலை திட்டமாக ஆக்கி ரூ.300 சம்பளம் வழங்கப்படும். மேலும் பல நல்ல திட்டங்கள் கிடைத்திட உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுகிறேன் என்றார்.
பின்னர் ரெட்டியார்சத்தில் தி.மு.க. தேர்தல் அலு வலகத்தை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் நம்முடைய கட்சிக்காரர்கள் அனைவரும் கூட்டணி கட்சியினருடன் இணைந்து தேர்தல் வேலையில் ஈடுபடுங்கள். இளைஞர்கள் அனைவரும் வீடு, வீடாக சென்று வாக்குகள் சேகரியுங்கள். அனைத்து மக்களையும் நேரில் சென்று பார்த்து வாக்கு கேளுங்கள். சுறுசுறுப்பாக செயல் படுங்கள். நமது தி.மு.க. ஆட்சியில் தான் ஆத்தூர் தொகுதிக்கு காவேரி குடிநீர் கொண்டு வரப்பட்டது.
காவேரி குடிநீர் அனைத்து கிராமங்களுக்கும் தேவை யான அளவு கிடைக்க ஏற்பாடு செய்து தருவோம். குடிநீர் இணைப்பு கிடைக்க வில்லையே என கவலைப்பட வேண்டாம். தி.மு.க.அரசு வந்தவுடன் அனைத்து வீடுகளுக்கும் இலவசமாக குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படும் என்றார்.
ரெட்டியார்சத்திரம் காலனி யில் உள்ள பெண்கள் ஆராத்தி எடுத்து வரவேற்ற னர். அப் போது அவர்கள் இ.பெரிய சாமியிடம் எங்கள் பகுதிக்கு சாக்கடை வசதி இல்லை. மழை காலத்தில் வீட்டிற்குள் தண்ணீர் வருகிறது என கூறினார்கள். அதற்கு அவர் கலைபடாதீர் கள் உங்கள் பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் அமைத்து தருகிறேன். அனைவரும் வரும் தேர் தலில் உதயசூரியன் சின்னத் தில் வாக்களித்து என்னை வெற்றிபெற செய்யுங்கள். தங்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என கூறினார்.
தொடர்ந்து வேலாம்பட்டி, தோப்பு பட்டி, கொத்தப்புள்ளி, கதிரனம்பட்டி, எஸ்.புதூர், கே.புதுக்கோட்டை, ரெட்டி யார்சத்திரம், சென்னம்பட்டி, தெப்பக்குளத்துப்பட்டி, அழகுபட்டி, புதுப்பட்டி, மன்னார் கோட்டை, கோயில் பட்டி, பஞ்சம்பட்டி உள்ளிட்ட 36 கிராமங்களில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.
பிரசாரத்தின் போது ஒன் றியச்செயலாளர் மணி, மாவட்ட துணைச்செயலா ளர் தெண்டபாணி, ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் சத்தியமூர்த்தி, ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராஜேஸ்வரி தமிழ்ச்செல்வன், மாவட்ட கவுன்சிலர் சுப்பு லெட்சுமி, மாணவர் அணி செயலாளர் எல்லை ராம கிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பார்த்தசாரதி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ரமேஷ், கொத்தப்புள்ளி ஊராட்சி துணைத்தலைவர் அன்பரசு, துணைத்தலைவர் ரெங்கசாமி, கவுன்சிலர் விவேகானந்தன், ஒன்றிய அவைத்தலைவர் வெள் ளையன், மாணவர் அணி அமைப்பாளர் செல்வராஜ், இலக்கிய அணி அமைப்பாளர் கோயில் கண்ணன், புதுக் கோட்டை ஊராட்சி முன் னாள் தலைவர் பன்னீர், புதுக்கோட்டை ஊராட்சி தலைவர் காமாட்சியப்பன், சில்வார்பட்டி ஊராட்சி தலைவர் ராமமூர்த்தி, டி.புதுப்பட்டி ஊராட்சி தலைவர் அருணாசலம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.