பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து சேலத்தில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

சேலம் மத்திய, மாவட்ட தி.மு.க. சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து சேலம் தாதகாப்பட்டி கேட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து சேலத்தில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
Published on

இதற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். அவைத்தலைவர் கலையமுதன், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ பேசும் போது,இந்தியாவில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102 ஆக அதிகரித்து உள்ளது.

விலையேற்றத்தை உடனடியாக குறைக்க வேண்டும். விலை உயர்வு குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதுவும் பேசவில்லை. தமிழக மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் முதல் குரல் கொடுப்பவர் மு.க.ஸ்டாலின். வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி, கட்சியின் மாநகர செயலாளர் ஜெயக்குமார், விவசாய அணி துணை அமைப்பாளர் இளந்திரையன், மெய்யனூர் பகுதி செயலாளர் சர்க்கரை சரவணன், நிர்வாகி எஸ்.ஆர்.அண்ணாமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com