தி.மு.க.-காங்கிரஸ் கருத்து வேறுபாடு: கணவன்-மனைவி பிரச்சினையை போன்றது முத்தரசன் சொல்கிறார்

தி.மு.க.-காங்கிரஸ் கருத்து வேறுபாடு, கணவன்- மனைவிக்கு இடையே ஏற்படும் பிரச்சினையை போன்றது தான் என்று முத்தரசன் கூறினார்.
தி.மு.க.-காங்கிரஸ் கருத்து வேறுபாடு: கணவன்-மனைவி பிரச்சினையை போன்றது முத்தரசன் சொல்கிறார்
Published on

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருக்குமேயானால் இந்த படுகொலை எப்படி நிகழ்ந்தது என்ற கேள்வி எழுகிறது. எந்த தீவிரவாதத்தையும் இந்த நாடு ஏற்காது.

கணவன்-மனைவி பிரச்சினை

குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று மோடியும், அமித்ஷாவும் மீண்டும், மீண்டும் தெரிவித்து வருகிறார்கள். ஜனநாயகத்தில், இப்படி முரட்டுத்தனமான முறையில் அணுகுவது ஏற்புடையது அல்ல. ஜனநாயக முறையில் இதை விவாதிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் அவர்கள் பெரும்பான்மையாக இருப்பதால் இந்த சட்டம் நிறைவேறி விட்டது. இதேபோல் பெரும்பான்மை இருக்கிறது என்கிற காரணத்தால் வருகிற காலங்களில் பா.ஜனதாவில் உறுப்பினர்களாக இருப்பவர்கள்தான் இந்தியாவில் இருக்க முடியும் என்று சட்டம் நிறைவேற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

தி.மு.க.-காங்கிரஸ் இடையே ஒரு கருத்தின் மீது ஒரு கருத்து சொல்லப்பட்டது தானே தவிர வேறு எந்த பிரச்சினையும் இல்லை. ஒரு குடும்பத்தில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்படும் பிரச்சினையை போன்றது தான் இது. இதனால் தி.மு.க. கூட்டணி உடைந்து விடும் என்று யாரும் எதிர்பார்க்க வேண்டாம். இந்த கூட்டணி மேலும், மேலும் பலம் பெறும் கூட்டணியாக இருக்கும். இவ்வாறு முத்தரசன் கூறினார்.

பிரசார பயணம்

பின்னர் வடசேரி அண்ணா விளையாட்டரங்கம் அருகில் ஜீவா சிலை முன்பிருந்து தொடங்கிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பிரசார பயணத்தை முத்தரசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணிக்கு சுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து, துணை செயலாளர் துரைராஜ், பொருளாளர் சுபாஷ் சந்திரபோஸ், நிர்வாகிகள் இசக்கிமுத்து, நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த பிரசார பயணம் இறச்சகுளத்தில் நிறைவடைந்தது.

முன்னதாக மாநில செயலாளர் முத்தரசன் வடசேரியில் உள்ள ஜீவா சிலைக்கும், நாகர்கோவில் மாநகராட்சி பூங்கா அருகில் உள்ள ஜீவா மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com