போலிநிதி நிறுவனங்களை நம்பவேண்டாம்: அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யுங்கள் - கலெக்டர் உலக சிக்கனநாள் வாழ்த்து

அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யுங்கள் என கலெக்டர் உலக சிக்கனநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
போலிநிதி நிறுவனங்களை நம்பவேண்டாம்: அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யுங்கள் - கலெக்டர் உலக சிக்கனநாள் வாழ்த்து
Published on

வேலூர்,

கலெக்டர் ராமன் உலக சிக்கனநாள் வாழ்த்தி செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

பொருளின் அளவறிந்து சேமித்து சிறப்புற வாழ்ந்திட வேண்டுமென்பதே நம்மில் பலரின் நோக்கம். சிக்கனமாக வாழ்ந்தால் சேமிக்கும் பழக்கம் தாமாக வரும். சிக்கனம் என்பது கடின உழைப்பினால் நாம் ஈட்டும் வருவாயின் சிறிய தொகையினை சேமித்து வருங்கால வாழ்வில் எதிர்கொள்ளும் இன்றியமையாத் தேவையினை நிறைவேற்றுவதாகும்.

சேமிப்பை முதலீடு செய்வதற்கு பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் பாதுகாப்பானது அஞ்சலக சேமிப்பு ஆகும். அதிக வட்டி போன்ற விளம்பரங்களை நம்பி போலியான நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யாமல், பாதுகாப்பான அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்திட வேண்டுகிறேன்.

உலக சிக்கன நாளாகிய இத்தருணத்தில் சிக்கனமுடன் சேமிப்பு செய்து மகிழ்வுடன் வாழ்ந்திட வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com