மத்திய அரசு வழங்கிய வென்டிலேட்டரை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்; மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ்

அவுரங்காபாத்தில் பழுதானதாக கூறப்படும் வென்டிலேட்டர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.
மத்திய அரசு வழங்கிய வென்டிலேட்டரை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்; மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ்
Published on

இயங்காத வென்டிலேட்டர்

அவுரங்காபாத் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மத்திய அரசால் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பல வென்டிலேட்டர்கள் முறையாக இயங்கவில்லை என செய்தி வெளியானது.இந்த தகவல் ஆதாரம் இல்லாதது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து இருந்தது. இந்தநிலையில் அவுரங்காபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிசிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

அரசியல் விளையாட வேண்டாம்

பிரதமரின் பி.எம். கேர்ஸ் நிதியில் இருந்து மராட்டியத்திற்கு சுமார் 5 ஆயிரம் வென்டிலேட்டர்கள் வழங்கப்பட்டன. இதில் பெரும்பாலானவை கடந்த 4 மாதங்களாக தொடர்ந்து வேலை செய்து வருகின்றன. எனவே அதில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் உடனடியாக மாற்றப்படவேண்டும். இதை வைத்து அரசியல் விளையாட வேண்டிய அவசியம் இல்லை.

கருப்பு பூஞ்சை

கருப்பு பூஞ்சை பாதிப்பு முதன்முதலில் மராட்டியத்தில் கண்டறியப்பட்டதால், மாநிலத்திற்கு தேவையான ஊசி மருந்துகளை சரியான நேரத்தில் வாங்க முடிந்தது. இதேநேரம் நாட்டின் பிற பகுதிகளில் இந்த மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நான் கருப்பு பூஞ்சை தொற்றுக்கான மருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்களை தொடர்புகொண்டு பேசிய பின்னர் தான் அதன் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com