கூந்தலை உலர்த்த ‘டிரையர்’ வேண்டாம்

கோடை காலத்தில் உடல் ஆரோக்கியத்தை பேணி பாதுகாப்பது போன்று கூந்தல் பராமரிப்பிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
கூந்தலை உலர்த்த ‘டிரையர்’ வேண்டாம்
Published on

வெப்ப தாக்கம் கூந்தலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். முடி உதிர்வு, முடி வெடிப்பு போன்ற பிரச்சினைகள் உண்டாகும். கோடைகாலத்துக்கு அவசியமான கூந்தல் பராமரிப்பு வழிமுறைகள்:

* கோடையில் சூரிய கதிர்கள் நேரடியாக கூந்தலைத்தாக்கும். அதனால், குளித்ததும் கூந்தலை உலர வைப்பதற்கான டிரையரை கோடைகாலத்தில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதுவும் வெப்பத்தை உமிழ்வதால் கூந்தலுக்கு அதிக சேதம் ஏற்பட்டுவிடும்.

* கோடை காலத்தில் வெளியே செல்லும்போது தலையில் தொப்பி அணிந்துகொள்ளலாம். அல்லது துணியால் தலையை மூடிக்கொள்ளலாம். அதன் மூலம் உச்சந்தலையில் கூந்தலுக்குரிய இயல்பான ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளலாம். வெப்பக்காற்றினால் கூந்தல் சேதம் அடைவதையும் தவிர்க்கலாம்.

* இறுக்கமான சிகை அலங்காரம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். கூந்தலை தளர்வாக பின்னிக்கொள்வதே நல்லது. இறுக்கமாக இருந்தால் கூந்தலில் வியர்வை படிந்து சூரிய கதிர்களின் தாக்கத்தால் முடி சேதமடைந்துவிடும்.

* கடற்கரை, நீச்சல் குளம் போன்ற இடங் களுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினால் உடனே கூந்தலை கழுவ வேண்டும்.

* கூந்தலை சீவுவதற்கு பரந்த பற்கள் கொண்ட சீப்புகளை பயன்படுத்த வேண்டும். பிரஷ் வைத்து கூந்தலை அலங்கரிப்பதை தவிர்க்க வேண்டும்.

* தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவது நல்லது. மயிர்கால்கள் வரை ஆழமாக ஊடுருவும்படி எண்ணெய்யை தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். குளியலுக்கு தரமான ஷாம்புகளையும் பயன்படுத்த வேண்டும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com