பொள்ளாச்சியில் டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்

பொள்ளாச்சியில் டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்
பொள்ளாச்சியில் டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்
Published on

பொள்ளாச்சி

மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மீதான தாக்குதலை தடுக்க தேசிய அளவிலான பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மருத்துவ சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர்.

பொள்ளாச்சியில் உள்ள இந்திய மருத்துவ சங்க கிளை அலுவலக வளாகத்தில் டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர்.

பின்னர் பொள்ளாச்சி கிளை தலைவர் திருமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

இதுவரை நாடு முழுவதும் கொரோனாவுக்கு 1,478 டாக்டர்கள் உயிரிழந்து உள்ளனர். ஆனால் அசாம், உத்தரபிரதேசம், பீகார், கர்நாடகா, மராட்டியம், ஆந்திரா உள்பட பல மாநிலங்களில் டாக்டர்கள், முன்கள பணியாளர்கள் தாக்கப்பட்டு வருகிறார்கள்.

டாக்டர்களை பாதுகாக்க தமிழகத்தில் சட்டம் உள்ளது. அதுபோன்று மத்திய அரசு தேசிய அளவில் சட்டத்தை இயற்ற வேண்டும்.

அத்துடன் மருத்துவமனையை பாதுகாக்கப் பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது செயலாளர் டாக்டர் சரவணன், பொருளாளர் சீனிவாஸ், மாநில சட்ட தலைவர் டாக்டர் தங்கமுத்து மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com