ஈஷா பசுமை பள்ளி இயக்கம் தமிழக பள்ளி கல்வி துறையுடன் இணைந்து பசுமை பள்ளி என்னும் சுற்றுச்சூழல் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்படி காஞ்சீபுரம் மாவட்டத்தில் மரக்கன்று வளர்ப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட 35 பள்ளிகளுக்கு ஈஷா பசுமை பள்ளி விருது வழங்கும் விழா நடைபெற்றது.