வரைவு வாக்குச்சாவடி பட்டியல் கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் வெளியிட்டார்

தென்காசி மாவட்டத்தில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல்களை மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் நேற்று வெளியிட்டார்.
வரைவு வாக்குச்சாவடி பட்டியல் கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் வெளியிட்டார்
Published on

தென்காசி,

தென்காசி மாவட்டத்தில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல்களை மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் நேற்று வெளியிட்டார்.

வரைவு வாக்குச்சாவடி பட்டியல்

தென்காசி மாவட்டத்தில் நகர்ப்புறம் மற்றும் ஊரக பகுதி உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல்கள் நடத்திட ஏதுவாக வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் நேற்று காலை தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. இதனை மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் வெளியிட்டார். அப்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) முத்திளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முகசுந்தரம், முருகன், மேலகரம் நகர பஞ்சாயத்து நிர்வாக அலுவலர் பாதுருநிஷா, தென்காசி நகரசபை ஆணையாளர் (பொறுப்பு) ஹசீனா ஆகியோர் உடனிருந்தனர்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 நகரசபைகளில் 282 வாக்குச்சாவடிகளும், 18 நகர பஞ்சாயத்துக்களில் 314 வாக்குச்சாவடிகளும், 10 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 1289 வாக்குச்சாவடிகள் ஆக மொத்தம் 1885 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் பார்வையிடலாம்

இந்த வாக்குச்சாவடி பட்டியல்களின் நகலினை சம்பந்தப்பட்ட நகரசபை அலுவலகம், நகர பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் யூனியன் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வையிடவும், தேவைப்பட்டால் நகல் பெறவும் தெரிவிக்கப்படுகிறது.

வாக்குச்சாவடிகள் அமைத்தல் தொடர்பான புகார்களை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் வழங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருடன் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் கலந்தாலோசிப்பதற்கான கூட்டம் வருகிற மார்ச் 2ம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இந்த தகவல் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com