நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல்; கலெக்டர் வெளியிட்டார்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட, காஞ்சீபுரம் மாநகராட்சி கமிஷனர் லெட்சுமி பெற்றுக்கொண்டார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல்; கலெக்டர் வெளியிட்டார்
Published on

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டார்.

வாக்குச்சாவடி பட்டியல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டார். அதனை காஞ்சீபுரம் மாநகராட்சி கமிஷனர் லெட்சுமி பெற்றுக்கொண்டார்.

பின்னர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி கூறியதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக, இந்த மாவட்டத்தில் உள்ள காஞ்சீபுரம் மாநகராட்சி மற்றும் 3 பேரூராட்சிகளில் வார்டு வாரியாக அமைக்கப்பட இருக்கும் 287 வாக்குச்சாவடிகளின் வரைவுபட்டியல் வெளியிடப்பட்டு பொதுமக்களின் தகவலுக்காக மாவட்ட கலெக்டர் அலுவலகம் (வளர்ச்சி பிரிவு), காஞ்சீபுரம் மாநகராட்சி மற்றும் 3 பேரூராட்சிகளின் அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஆட்சேபனைகள் இருப்பின்

இந்த பட்டியலின் மீது ஆட்சேபனைகள் மற்றும் கருத்துகள் ஏதேனும் இருப்பின் இன்று (திங்கட்கிழமை) அதன் விவரத்தினை அந்தந்த உள்ளாட்சி அமைப்புக்களின் அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்களான காஞ்சீபுரம் மாநகராட்சி கமிஷனர் மற்றும் வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி செயல் அலுவலர்களிடம் எழுத்துப்பூர்வமாகவும், இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகளுக்காக நடைபெறும் கூட்டத்திலும் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றார்.

அப்போது பேரூராட்சிகள் உதவி இயக்குனர் வில்லியம் ஜேசுதாஸ் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சிதேர்தல்) ஸ்டீபன் ஜெய சந்திரா, தேர்தல் பிரிவு வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com