வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: கோவை மாவட்டத்தில் 29,23,837 வாக்காளர்கள் - ஆண்களை விட பெண்களே அதிகம்

வரைவு வாக்காளர்பட்டியலை கலெக்டர் ராஜாமணி நேற்று வெளியிட்டார். கோவை மாவட்டத்தில் மொத்தம் 29,23,837 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண்களைவிட பெண்கள் அதிகமாக உள்ளனர். கோவைமாவட்ட கலெக்டர் ராஜாமணி வரைவு வாக்காளர் பட்டியலை நேற்று வெளியிட்டார். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம்கூறியதாவது:-
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: கோவை மாவட்டத்தில் 29,23,837 வாக்காளர்கள் - ஆண்களை விட பெண்களே அதிகம்
Published on

கோவை,

இந்திய தேர்தல்ஆணையத்தின் அறிவுறுத்தல் படி வரைவு வாக்காளர் பட்டியல்வெளியிடப்படுகிறது. கோவை மாவட்டத்தில் மொத்தம் 29 லட்சத்து 23 ஆயிரத்து 837 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 14 லட்சத்து 48 ஆயிரத்து 31 ஆண் வாக்காளர்களும், 14 லட்சத்து 75 ஆயிரத்து 461 பெண் வாக்காளர்களும், 3-ம்பாலினத்தவர்கள்345 பேரும் உள்ளனர். ஆண் வாக்காளர்களைவிட பெண்வாக்காளர்கள் 27 ஆயிரத்து 430 பேர் அதிகமாக உள்ளனர்.

கோவையில் உள்ள 10சட்டமன்ற தொகுதிகளில்அதிகபட்சமாககவுண்டம்பாளையம்சட்டமன்ற தொகுதியில்4 லட்சத்து 33 ஆயிரத்து 819 பேர் உள்ளனர். குறைந்தபட்சமாகவால்பாறை சட்டமன்ற தொகுதியில்1 லட்சத்து 98 ஆயிரத்து 520 பேர் உள்ளனர்.

கடந்த முறை வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலைவிட தற்போது21 ஆயிரத்து 327 இளம் வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர். மேலும் கடந்த வாக்காளர் பட்டியலில் இருந்துஇறந்தவர்கள்ஆயிரத்து 67 பேர், முகவரிமாறி சென்றவர்கள்2 ஆயிரத்து 909 பேர், ஒரு முறைக்கு மேல் பெயர்இடம்பெற்றவர்கள்623 பேர் என மொத்தம் 4 ஆயிரத்து 599 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.

தற்போதுவெளியிடப்படும்வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர்விடுபட்டவர்கள்மற்றும் 1-1-2020-ஐ தகுதிநாளாக கொண்டு18 வயதுபூர்த்தியடைந்தவர்கள், வாக்காளர் பட்டியலில்பெயர்களை சேர்க்கவிரும்புபவர்கள், அதேபோல் திருத்தங்கள், முகவரி மாற்றம், பெயர் நீக்கம்ஆகியவற்றுக்கும்விண்ணப்பங்களை அளிக்கலாம். அனைத்து வாக்குப்பதிவு மையங்கள்,வருவாய் கோட்டாட்சியர்அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள்பெறப்படும்.

அதுதவிரஅடுத்த மாதம் (ஜனவரி) 4, 5 மற்றும் 11, 12 ஆகிய தேதிகளில் அனைத்துவாக்குச்சாவடிமையங்களிலும் சிறப்பு முகாம்கள்நடத்தப்பட்டு பொதுமக்களிடம்இருந்து விண்ணப்பங்கள்பெறப்படும். வாக்காளர் பட்டியலில்பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்வது தொடர்பாக இணையதளம் மூலமாகமனுக்களை பதிவுசெய்யவும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இதற்காக www.nvsp.in எனும் இணையதள முகவரி அல்லதுவோட்டர்ஸ்ஹெல்ப்லைன்என்ற செயலி மூலமாகவோ பொதுமக்கள் தங்கள் விண்ணப்பங்களைபதிவேற்றம்செய்யலாம்.

பெயர் சேர்ப்பதற்கு படிவம்6-ம், பெயர் நீக்கம் செய்ய படிவம் 7-ம், திருத்தங்கள் மேற்கொள்ள படிவம் 8-ம், ஒரேசட்டமன்ற தொகுதிக்குள்இடம்மாறியவர்கள்படிவம் 8 ஏ-ம் பயன்படுத்த வேண்டும்.

பொதுமக்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டைகளைஎளிதில்பெறும் வகையில்இ-சேவை மைய ஊழியர்கள், அரசு அலுவலர்கள், அரசியல் கட்சியினர் கொண்ட கூட்டம் விரைவில்நடத்தப்படும்.ஆன்லைன்மூலம் விண்ணப்பிக்கும் வாக்காளர்கள்இ-சேவைமையங்களுக்கு சென்றுதங்களது அடையாளஅட்டைகளை பெற்றுக்கொள்ளலாம். இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற 14-2-2020 அன்றுவெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வரைவு வாக்காளர் பட்டியல் நகல் அரசியல் கட்சியினரிடம்வழங்கப்பட்டது. இதில்அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ்,பா.ஜனதா,கம்யூனிஸ்டு கட்சி யினர் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com