

பொன்னேரி,
பொன்னேரியை அடுத்த வஞ்சிவாக்கம் கூட்ரோட்டில் வசித்து வந்தவர் மணிமேகலை (வயது 70). இவருடன் இவரது மகளின் மகனான கமல் தங்கி இருந்து பொன்னேரியில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்த கமல் மது குடிக்க பணம் கேட்டு மணிமேகலையுடன் தகராறு செய்தார்.
இதனை மணிமேகலை கண்டித்து பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இந்த நிலையில் மது குடித்து வந்த கமல் மீண்டும் பாட்டி மணிமேகலையிடம் தகராறில் ஈடுபட்டார்.
அப்போது அருகில் கிடந்த உருட்டுக்கட்டையால் மணிமேகலையை தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது மணிமேகலை கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து திருப்பாலைவனம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து கமலை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.