குடிநீர், கழிவுநீர் கால்வாய் பிரச்சினைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பேன் திமுக வேட்பாளர் பையா கவுண்டர் வாக்குறுதி

சரவணம்பட்டி பகுதியில் குடிநீர், கழிவுநீர் கால்வாய் பிரச்சினைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பேன் கவுண்டம்பாளையம் தொகுதி திமுக வேட்பாளர் பையா கவுண்டர் வாக்குறுதி.
குடிநீர், கழிவுநீர் கால்வாய் பிரச்சினைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பேன் திமுக வேட்பாளர் பையா கவுண்டர் வாக்குறுதி
Published on

சரவணம்பட்டி,

தமிழக சட்டமன்ற தேர்தலில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற

தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தி.மு.க வேட்பாளர் பையா கவுண்டர் (எ) ஆர்.கிருஷ்ணன் போட்டியிடுகிறார். அவர் நேற்று சரவணம்பட்டி பகுதி 28, 29, 30, 31 ஆகிய வார்டுகளுக்குட்பட்ட அம்மன் நகர், சிதம்பரம் நகர், சரவணம்பட்டி, பெரிய வீதி, பெருமாள் கோவில் வீதி, விநாயகபுரம், கிருஷ்ணாபுரம், ஜனதா நகர், சிவானந்தாபுரம், விசுவாசபும், ரெவின்யூ நகர் ஆகிய பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது,

தி.மு.க ஆட்சி அமைந்தால், எனக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்தால் சரவணம்பட்டி பகுதியில் நீண்ட நாட்களாக இருந்து வரும் குடிநீர், கழிவுநீர் கால்வாய், தார் சாலை, தெரு விளக்கு மற்றும் தேவையான இடங்களில் சமுதாய கூடங்கள் அமைப்பது உள்ளிட்ட மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தையும் உடனடியாக செய்து தருவேன் என வாக்குறுதி அளித்தார். இந்நிகழ்ச்சியில் சி.பி.எம் கட்சி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சி மாவட்ட செயலாளர் சாமுவேல் தாஸ், பகுதி தலைவர் ரகுராமன், தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் கதிர்வேல்சாமி, பகுதி பொறுப்பாளர் சிவா (எ) பழனிச்சாமி, சி.பி.ஐ கட்சி தொகுதி பொறுப்பாளர் பாண்டியன், ம.தி.மு.க விஷ்வராஜ், ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி முத்துவளவன், சி.பி.எம் சண்முகம், செல்லக்குட்டி, குட்டி, ஜெகநாதன், கொ.ம.தே.க நாகராஜ், குருசாமி, அசோக், சங்கீத், தேவராஜ் மற்றும் தி.மு.க அரசூர் பூபதி, சிங்கை ரவிச்சந்திரன், வட்ட செயலாளர்கள் வசந்தராஜ், முகம்மது நூர்தீன், கதிர்வேல், ரங்கசாமி, பொறுப்புக்குழு உறுப்பினர்கள் மனோகரன், கந்தசாமி, சோமசுந்தரம், பொன்விஜயன் மற்றும் பாபு, துரை, ஜோதிமணி, சங்கீத் மணிகண்டன், ரமேஷ் குழந்தைவேல்,

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com