டிரைவர், கண்டக்டர்களுக்கு பணி நிரந்தர உத்தரவு ; அமைச்சர் வழங்கினார்

ஆரணியில் டிரைவர், கண்டக்டர்களுக்கு பணி நிரந்தர உத்தரவு நகல்களை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்.
டிரைவர், கண்டக்டர்களுக்கு பணி நிரந்தர உத்தரவு ; அமைச்சர் வழங்கினார்
Published on

ஆரணி,

ஆரணி சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் திருவண்ணாமலை மண்டல அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தற்காலிக டிரைவர், கண்டக்டர்களுக்கு பணி நிரந்தர உத்தரவு வழங்கும் விழா மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி தலைமையில் நடந்தது. ஆரணி வருவாய் கோட்டாட்சியர் இல.மைதிலி, தூசி கே.மோகன் எம்.எல்.ஏ., அரசு போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர் சி.கே.ராகவன், துணை பொது மேலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி (வணிகம்), மணி (தொழில்நுட்பம்), மாவட்ட ஆவின் துணைத்தலைவர் பாரி பி.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆரணி தாசில்தார் தியாகராஜன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு, 106 டிரைவர்களுக்கும், 21 கண்டக்டர்களுக்கும் பணி நிரந்தர உத்தரவு நகல்களை வழங்கி பேசினார்.

மேலும் வருவாய்த்துறை சார்பில் 40 பேருக்கு உதவித்தொகைக்கான உத்தரவுகளையும் அமைச்சர் வழங்கினார். விழாவில் மேற்கு ஆரணி ஒன்றியக்குழு தலைவர் பச்சையம்மாள்சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ. அரங்கநாதன் மற்றும் கூட்டுறவு சங்க தலைவர்கள் உள்பட அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com