மீன், நாட்டுக்கோழி இறைச்சி சாப்பிடுங்கள்; குமாரசாமிக்கு சபாநாயகர் அறிவுரை

மீன், நாட்டுக்கோழி இறைச்சி சாப்பிடுங்கள் என்று குமாரசாமிக்கு சபாநாயகர் ஆலோசனை கூறினார்.
மீன், நாட்டுக்கோழி இறைச்சி சாப்பிடுங்கள்; குமாரசாமிக்கு சபாநாயகர் அறிவுரை
Published on

பெங்களுரு,

கர்நாடக சட்டசபையில் நேற்று கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரி கிருஷ்ண பைரேகவுடா, நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் மீது பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது பா.ஜனதா உறுப்பினர் சி.டி.ரவி குறுக்கிட்டு, நகைக்கடை நிறுவனம் பொதுமக்களின் நிதி மோசடியில் அந்த நிறுவனத்தின் உரிமையாளருடன் அமர்ந்து பிரியாணி சாப்பிட்டனர். அந்த நிறுவனம் மீது ஏற்கனவே புகார் வந்தபோது, அவற்றுக்கு இந்த அரசு நற்சான்றிதழ் கொடுத்தது என்றார்.

அப்போது குறுக்கிட்டு முதல்-மந்திரி குமாரசாமி பேசியதாவது:-

எனக்கு 2-வது முறையாக இதய அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அதனால் அசைவ உணவுகள் சாப்பிடுவது இல்லை. ரம்ஜான் பண்டிகையின்போது, காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் வந்து அழைத்தார். அதன் பேரில் அந்த நகைக்கடை நிறுவனத்திற்கு நேரில் சென்றேன். அந்த நகைக்கடை நிறுவனம் 12 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

அந்த நிறுவனம் ரூ.250 கோடி வருமான வரியை செலுத்தியுள்ளது. வருமான வரித்துறை அந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளது.

இவ்வாறு குமாரசாமி பேசினார்.

அப்போது சபாநாயகர் ரமேஷ்குமார், முழுவதுமாக அசைவ உணவு சாப்பிடுவதை விட வேண்டும். மீன், நாட்டுக்கோழி இறைச்சி சாப்பிடுங்கள் என்று அறிவுரை கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com