தொடர் மழை எதிரொலி: கீரனூரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது

தொடர் மழை காரணமாக கீரனூரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் பெண் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
தொடர் மழை எதிரொலி: கீரனூரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது
Published on

கீரனூர்,

புதுக்கோட்டை மாவட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொடர்மழையின் காரணமாக கீரனூர் பகுதிகளில் ஏராளமான வீடுகள் ஈரப்பதத்துடன் காணப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையால் கீரனூர் பழைய சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த முகமது ரபீக் என்பவரது வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. இதில் வீட்டின் உள்ளே தூங்கி கொண்டிருந்த முகமது ரபீக்கின் மனைவி ரபீத்பேகம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இது குறித்து தகவல் அறிந்த குளத்தூர் வட்ட தாசில்தார் கலைமணி, வருவாய் ஆய்வாளர் பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து இடிந்து விழுந்த வீட்டின் சுவரை பார்வையிட்டனர். மேலும் இப்பகுதியில் உள்ள அனைவரையும் கவனமாக இருக்கவேண்டும் எனவும் அறிவுரை வழங்கினர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை வரை பெய்த மழையளவு மி.மீட்டரில் பின்வருமாறு:-

ஆதனக்கோட்டை-12, பெருங்களூர்-3, புதுக்கோட்டை-1, ஆலங்குடி-2, அறந்தாங்கி-3, மீமிசல்-4, கந்தர்வகோட்டை-24, இலுப்பூர்-1, குடுமியான்மலை-26, அன்னவாசல்-10, உடையாளிப்பட்டி-11, கீரனூர்-4, மணமேல்குடி-8, பொன்னமராவதி-7, காரையூர்-16.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com