அம்மம் பள்ளி அணையிலிருந்து நீர் திறப்பு எதிரொலி: கரையோர மக்களுக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;-
அம்மம் பள்ளி அணையிலிருந்து நீர் திறப்பு எதிரொலி: கரையோர மக்களுக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் வெள்ள அபாய எச்சரிக்கை
Published on

ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அம்மம்பள்ளி அணையிலிருந்து 1,000 கன அடி நீர் நேற்று இரவு 8.30 மணி முதல் இன்று(வியாழக்கிழமை) மதியம் 3 மணி வரை திறக்கப்படவுள்ளது. திறக்கப்பட்ட நீரானது இன்று நள்ளிரவு பூண்டி நீர்த்தேக்கம் வரை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். மேலும் நகரி ஆற்றில் பள்ளிப்பட்டு பாலத்திலிருந்து பூண்டி நீர்த்தேக்கம் வரை கரையோரம் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடப்படுகிறது என அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com