பெற்றோர்கள் சார்பில் அரசு பள்ளிகளுக்கு கல்விச்சீர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு பெற்றோர்கள் சார்பில் கல்விச்சீர் வழங்கப்பட்டது.
பெற்றோர்கள் சார்பில் அரசு பள்ளிகளுக்கு கல்விச்சீர்
Published on

அரிமளம்,

அரிமளம் ஊராட்சி ஒன்றியம் முனசந்தை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பள்ளிக்கு கல்விச்சீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வட்டார கல்வி அதிகாரி திருப்பதி தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் யோகா முன்னிலை வகித்தார். பள்ளிக்கு தேவையான பொருட்களான பீரோ, தண்ணீர் தொட்டி, சேர், கடிகாரம், ஒலி பெருக்கி, எழுது பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமியிடம் வழங்கினார்கள். முடிவில் பட்டதாரி ஆசிரியர் மகேஸ்வரன் நன்றி கூறினார்.

திருமயம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் நிகழ்ச்சி வட்டார கல்வி அலுவலர் ஜேம்ஸ் தலைமையில் நடைபெற்றது. கல்விச்சீரை மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஊர்வலமாக கொண்டு வந்து பள்ளிக்கு வழங்கினர்.

திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கைக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் நிகழ்ச்சி வட்டார கல்வி அதிகாரி உமாதேவி தலைமையில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் வில்லியம் முன்னிலை வகித்தார். மாணவர்களின் பெற்றோர்கள் கல்விச்சீரை ஊர்வலமாக எடுத்து வந்து பள்ளியில் வழங்கினர்.

இதேபோல் கீரனூர் அருகே உள்ள உடையாளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள், கல்வி மேலாண்மைக்குழுவினர் மற்றும் முன்னாள் மாணவர்கள் சார்பில் கல்விச்சீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு வட்டார கல்வி அதிகாரிகள் துரைராஜ், புவனேஸ்வரி ஆகியோர் தலைமை தாங்கினர். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேஸ்வரி வரவேற்றார். முடிவில் ஆசிரியர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com