

அரவக்குறிச்சி,
அரவக்குறிச்சி ஒன்றியம் சேந்தமங்கலம் கீழ்பாகம் ஊராட்சி ஆர்.புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு வட்டாரக் கல்வி அலுவலர் சித்ரா தலைமை தாங்கினார்.வட்டாரக் கல்வி அலுவலர் விஜயகருணாகரன் முன்னிலை வகித்தார். பொது மக்கள் சார்பில் மேளதாளங்கள் முழங்க கல்விச்சீர் பொருட்களை ஊர்வலமாக பள்ளிக்கு எடுத்து வந்து வழங்கினார்கள். இவ்விழாவில் பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் கஸ்தூரி,பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சுப்பிரமணி, ஆசிரியர் பயிற்றுநர் கலையரசி மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் குப்புசாமி, பாலகிருஷ்ணன், செல்வராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் ராஜேந்திரன் வரவேற்றார். முடிவில் பள்ளியின் உதவி ஆசிரியர் ஆரோக்கியசாமி நன்றி கூறினார்.
க.பரமத்தி ஒன்றியம், முன்னூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு மாணவர்களின் பெற்றோர்கள் சார்பில் கல்விச்சீர் வழங்கும் விழா நடந்தது. க.பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலர் முருகன் தலைமை தாங்கி பெற்றோர்கள் ஊர்வலமாக கொண்டு வந்த பள்ளிக்கு தேவையான ரூ.1 லட்சத்து 40ஆயிரம் மதிப்பிலான உபகரணங்களை பள்ளியின் தலைமை ஆசிரியை சரஸ்வதியிடம் ஒப்படைத்தார். ஒருங்கிணைந்த கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோதி, ஆசிரிய பயிற்றுனர் ஆனந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் உள்ளூர் பிரமுகர்கள் துரைசாமி, நாச்சிமுத்து, சிவக்குமார், தண்டபாணி, சுரேஷ் மற்றும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி ஆசிரியை காந்திமதி நன்றி கூறினார்.