

பெங்களூரு,
குமாரசாமி பேசுகையில், கர்நாடகத்தில் கல்வித்துறைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியது அவசியம். குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்க வேண்டும். அந்த திசையில் டெல்லியில் உள்ள கல்வி முறை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து எனக்கு அறிக்கையை வழங்க வேண்டும் என்றார்.
குமாரசாமியின் இந்த கருத்தை வரவேற்றுள்ள டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், கல்வித்துறை திட்டங்கள் குறித்து எங்களின் அனுபவங்களை கர்நாடக அரசுடன் பகிர்ந்துக்கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார்.