‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: எழும்பூர் ரெயில் நிலையத்தில் இரட்டை நடைமேடை பணிகள் தொடங்கியது

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகளின் நீண்ட கால எதிர்பார்ப்பு நிறைவேறும் வகையில் இரட்டை நடைமேடை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: எழும்பூர் ரெயில் நிலையத்தில் இரட்டை நடைமேடை பணிகள் தொடங்கியது
Published on

சென்னை,

சென்னை மக்களின் போக்குவரத்தை பெரிதும் ஈடுகட்டி வருவது மின்சார ரெயில்கள் என்றால் அது மிகையல்ல. அதனாலேயே கூட்ட நெரிசல் இன்றி பயணிகள் உபயோகப்படுத்தி செல்ல ரெயில் நிலையங்களில் நடை மேம்பாலங்கள், நடைமேடைகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு இருக்கின்றன. இதில் எழும்பூர், மாம்பலம், கிண்டி, தாம்பரம் போன்ற ரெயில் நிலையங்கள் எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சமில்லாதவை ஆகும்.

பயணிகள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் தாம்பரம், மாம்பலம், பூங்கா உள்ளிட்ட ரெயில் நிலையங் களில் இரட்டை நடைமேடைகள் (மின்சார ரெயிலின் இருபக்கமும் இருந்து வெளியேறும் வகையில்) அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் முக்கிய நிறுத்தமான எழும் பூரில் இதுபோல இரட்டை நடைமேடை இல்லையே... என்று பயணிகள் ஏங்கினர்.

தாம்பரம்-கடற்கரை மார்க்கமாக வரும் ரெயில்களில் இருந்து பயணிகள் ஒரு வழியில் மட்டுமே (வலதுபுறமாக) இறங்கிட முடியும். இதனால் பயணிகள் நடைமேடையில் ஏறிச்சென்று தான் மாறமுடியும். சில பயணிகள் ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடந்தும் வந்துகொண்டிருந்தனர்.

இதுதொடர்பாக கடந்த ஜனவரி மாதம் 10-ந் தேதி தினத்தந்தியில் படத்துடன் செய்தி வெளியானது. அந்த செய்தியில், பயணிகள் தேவைக்கேற்ப முக்கிய நிறுத்தமான எழும்பூர் ரெயில் நிலையத்தின் 11-வது நடைமேடையில் இரட்டை நடைமேடை அமைக்கவேண் டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்தநிலையில் தினத்தந்தி செய்தி எதி ரொலியாக எழும்பூர் ரெயில் நிலையத்தின் 11-வது நடை மேடையில் இரட்டை நடைமேடை அமைக்கும் பணி கள் தொடங்கப்பட்டு உள்ளன.

இந்த பணிகள் நிறைவடையும் பட்சத்தில் தாம்பரம்-கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரெயில்களில் இனி இருபுறமும் பயணிகள் இறங்கி செல்ல முடியும். அருகில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையம் மற்றும் அலுவலகங்களுக்கு விரைவில் செல்லமுடியும். நடைமேடையில் நீண்ட வரிசையில் காத்திருந்து சிரமத்துடன் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. தினத்தந்தி செய்தி மூலம் பயணிகளின் நீண்ட கால எதிர்பார்ப்பு நிறைவேற உள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
எழும்பூர் ரெயில் நிலையத்தின் 10, 11-வது நடைமேடையில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டம் மிகுதியாகவே இருக்கும். கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையிலும், மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு பயணிகள் எளிதில் செல்லும் வகையிலும் தாம்பரத்தில் இருந்து கடற்கரை செல்லும் வழித்தடத்தின் இடது புறம் மற்றொரு நடைபாதை அமைக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு எடுத்திருக் கிறது. இந்த திட்டத்துக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகளும் தொடங்கப்பட்டு இருக்கி றது. இன்னும் 2 மாதங்களில் இப்பணிகள் முடிவடை யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com