ஆண்டிப்பட்டி, கம்பம் பகுதிகளில் கூட்டுறவு சங்க தலைவர் பதவிக்கான தேர்தல்

ஆண்டிப்பட்டி, கம்பம் பகுதிகளில் கூட்டுறவு சங்க தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது.
ஆண்டிப்பட்டி, கம்பம் பகுதிகளில் கூட்டுறவு சங்க தலைவர் பதவிக்கான தேர்தல்
Published on

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் உள்ள 11 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு ஏற்கனவே சங்கம் வாரியாக இயக்குனர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில் நேற்று ரெங்கசமுத்திரம் கூட்டுறவு சங்க தலைவராக அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் லோகிராஜனும், துணை தலைவராக வரதராஜனும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.

அதேபோல் சக்கம்பட்டி கூட்டுறவு பண்டகசாலை, அனுப்பபட்டி கூட்டுறவு கடன் சங்கம், பாப்பம்மாள்புரம் கூட்டுறவு வீட்டு வசதி கடன் சங்கம் ஆகிய சங்கத்திற்கு தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்வு செய்யப்பட்டனர். கன்னியப்பபிள்ளைபட்டி கூட்டுறவு கடன் சங்கத்திற்கு தேர்வு செய்வதில் சமரசம் ஏற்படாததால் தேர்தல் அலுவலர் காளிப்பாண்டி முன்னிலையில் தேர்தல் நடந்தது. இதில் 11 பேரில் 6 வாக்குகள் பெற்று அ.தி.மு.க.வை சேர்ந்த நடராஜன் தலைவராகவும், துணைத் தலைவராக செல்வராஜும் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.

கம்பத்தில் உத்தமபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 11 இயக்குனர்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டனர். தலைவர் மற்றும் துணை தலைவருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் கம்பம் ஒன்றிய முன்னாள் அ.தி.மு.க. செயலாளர் ராஜாங்கம் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். துணை தலைவராக தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கம்பம் நகர செயலாளராக உள்ள பாலு தேர்வு செய்யப்பட்டார்.

இதேபோல் கம்பம் நகர கூட்டுறவு கடன் சங்கத்தில் தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த சேகர் தேர்வு செய்யப்பட்டார். துணை தலைவருக்கு அ.தி.மு.க.வை சேர்ந்த பாண்டிக்குமாரும், அ.ம.மு.க. சார்பில் ஜெகநாதன் மனுத்தாக்கல் செய்தனர். இதற்கு பாண்டிக்குமார் கடும் ஆட்சேபனை செய்தார். சிறிது நேர பரபரப்புக்கு பிறகு ஜெகநாதன் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com