தஞ்சை மாவட்டத்தில் மின் ஊழியர்கள் வேலை நிறுத்தம்

ஊதிய உயர்வு வழங்க கோரி தஞ்சை மாவட்டத்தில் மின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை மாவட்டத்தில் மின் ஊழியர்கள் வேலை நிறுத்தம்
Published on

தஞ்சாவூர்,

ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஊதிய உயர்வில் அதிகாரிகள்-ஊழியர்கள் என பாகுபாடு காட்டக்கூடாது. நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்டத்தில் மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 1889 ஊழியர்களில் 155 பேர் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.

இவர்கள் அனைவரும் தஞ்சை மணிமண்டபம் அருகே உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். மின் ஊழியர் மத்திய அமைப்பின் துணைத் தலைவர்கள் ஜோதிராமன், ராஜாராமன், மாவட்ட செயலாளர் காணிக்கைராஜ், தலைவர் மைக்கேல்ராஜ், பொருளாளர் ஆரோக்கியசாமி, பாரதீய மின் தொழிலாளர் சம்மேளன மாவட்ட செயலாளர் ரவி, சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைத் செயலாளர் அன்பு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

இந்த வேலை நிறுத்தத்தினால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com