சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில்ஏறமேற்கு ரெயில்வே தடைவிதித்து உள்ளது.
சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
Published on

மும்பை,

மும்பையில் மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் சர்ச்கேட்டில் இருந்து பால்கர் மாவட்டம் தகானு வரையிலும் மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. மின்சார ரெயிலில் தினசரி நீண்ட தூரம் பயணிக்கும் சீசன் டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் பயண நேரத்தை குறைக்கும் வகையில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பொது பெட்டிகள் மட்டுமின்றி முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளிலும் ஏறிவிடுகிறார்கள்.

இதன் காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவு செய்து பயணம் செய்பவர்களுக்கும், அவர்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வருகிறது. அண்மையில் கட்ச் எக்ஸ்பிரசில் இதேபோல ஏறியவர்களால் ரெயிலில் பயங்கர சண்டை உண்டானது.

இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில், சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணிப்பதற்கு மேற்கு ரெயில்வே தடை விதித்து உள்ளது.

இதற்காக சீசன் டிக்கெட்களில் நாட் பெர்மிட்டடு டு டிராவல் இன் ரிசர்வ்டு கோச்சஸ்' (முன்பதிவு பெட்டிகளில் பயணிக்க அனுமதி கிடையாது) என ஆங்கிலத்திலும், இந்தியிலும் அச்சிட்டு வழங்க ரெயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுன்ட்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

நீண்ட தூர ரெயிலில் செல்ல விரும்பும் சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் சூப்பர் பாஸ்ட் கட்டணத்துடன் பொது பெட்டியில் மட்டும் பயணித்து கொள்ளலாம்.

இந்த விதிமுறைகளை மீறி எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள் பிடிபட்டால் அவர்களிடம் இருந்து ரூ.250 அபராதமாக வசூலிக்கப்படும் என மேற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com