மின்வாரிய ஊழியர்கள் ஒருநாள் வேலை நிறுத்தம் பணிகள் பாதிக்கப்படவில்லை

கடலூர் மாவட்டத்தில் மின்வாரிய ஊழியர்கள் நேற்று ஒருநாள் வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் மின்வாரிய பணிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை.
மின்வாரிய ஊழியர்கள் ஒருநாள் வேலை நிறுத்தம் பணிகள் பாதிக்கப்படவில்லை
Published on

கடலூர்

தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு அளிக்கப்படுகிறது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக ஊதிய உயர்வு அளிக்கப்படவில்லை. இது தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் நிலுவைத்தொகை இல்லாமல் ஊதிய உயர்வு வழங்க மின்வாரியம் முடிவு செய்தது. ஆனால் மின்வாரியம் முடிவு செய்த படி ஊதிய உயர்வு வழங்க நிதித்துறை மறுத்து விட்டது.

இதனை ஏற்க மறுத்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு(சி.ஐ.டி.யு.), பாரதீய மின்தொழிலாளர் சங்கம் ஆகிய 2 பிரதான சங்கங்கள் உள்பட 9 சங்கங்கள் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தன. ஆனால் இந்த 2 பிரதான சங்கங்களைத்தவிர மற்ற 15 பிரதான சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில் ஊதிய உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே திட்டமிட்டபடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் பாரதீய ஜனதா தொழிற்சங்கம் உள்பட 9 சங்கங்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. கடலூர் மாவட்டத்தில் இந்த சங்கங்களைச்சேர்ந்த மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தபோராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றி மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் 2,930 மின்வாரிய ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். அவர்களில் 670 பேர் நேற்று பணிக்கு வரவில்லை, ஒருநாள் வேலை நிறுத்தம் என்பதால், மின் வாரிய பணிகளில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com