

களியக்காவிளை,
களியக்காவிளை அருகே உள்ள குளப்புறம் பகுதியில் செம்மண் கடத்துவதாக களியக்காவிளை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் போலீசார் நேற்று அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு செம்மண் ஏற்றி கடத்திய டெம்போவை பறிமுதல் செய்து டிரைவர் அடைக்காகுழியை சேர்ந்த பெனிஸ் மோன் என்பவரை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.