பாடப்புத்தகத்தில் அய்யா வைகுண்டர் பற்றிய தவறான தகவல்களை நீக்க வேண்டும்

தமிழக அரசு பாடப்புத்தகத்தில் அய்யா வைகுண்டர் பற்றிய தவறான தகவல்களை நீக்கக்கோரி கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம் அய்யாவழி மக்கள் ஒருங்கிணைப்பு குழுவினர் மனு அளித்தனர்.
பாடப்புத்தகத்தில் அய்யா வைகுண்டர் பற்றிய தவறான தகவல்களை நீக்க வேண்டும்
Published on

நாகர்கோவில்,

குமரி மாவட்ட சாமிதோப்பு அய்யாவழி மக்கள் ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் சிவசந்திரன் மற்றும் குழுவினர் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டர் பிரசாந்த் வடநேரேவை சந்தித்து ஒரு மனு அளித்தனர்.

தமிழக பள்ளி பாடத்திட்டத்தில் பல மாற்றங்களை செய்து கல்வி தரத்தை உயர்த்த பள்ளி கல்வித்துறை முயற்சி செய்வதை பாராட்டுகிறோம். அதே சமயம் 10ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில வழி சமூக அறிவியல் பாடப்புத்தகத்திலும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக இளங்கலை பிரிவில் உள்ள பாடத்திலும் அய்யா வைகுண்டர் பற்றிய பாடம் வெளி வந்துள்ளது. ஆனால் அதில் அய்யா வைகுண்டர் பற்றி தவறான தகவல்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன. இதன் காரணமாக அய்யாவழி பக்தர்கள் மனவேதனையில் உள்ளனர். எனவே பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள அய்யா வைகுண்டர் பற்றிய தவறான தகவல்களை நீக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டம்

மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி அய்யாவழி ஒருங்கிணைப்பு குழு சார்பில் வருகிற 3ந் தேதி நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com