வைப்பாற்றில் மணல் திருட்டை தடுக்க சிறப்பு படை அமைக்க வலியுறுத்தல்

வைப்பாற்றில் மணல் திருட்டை தடுக்க சிறப்பு படை அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
வைப்பாற்றில் மணல் திருட்டை தடுக்க சிறப்பு படை அமைக்க வலியுறுத்தல்
Published on

சாத்தூர்,

மேற்கு தொடர்ச்சி மலையில் ராஜபாளையம் அருகே உற்பத்தியாகும் வைப்பாறு வடகரை, தென்கரை, ஆலங்குளம், வெம்பக்கோட்டை, பந்துவார்பட்டி, ஓ.மேட்டுப்பட்டி வழியாக சாத்தூரை வந்தடைகிறது. அங்கிருந்து பெரிய கொல்லப்பட்டி, அய்யம்பட்டி வழியாக இருக்கன்குடி அணையில் கலக்கிறது. சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆற்றுப்படுகையாக உள்ளதால் மணல் திருட்டு கும்பலுக்கு இந்த ஆறு சொர்க்கபுரியாக உள்ளது.

மணல் திருட்டை தடுக்க முன்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை அமைத்து இருந்தார். அந்த பிரிவினர் 24 மணி நேரமும் கண்காணித்து வந்தனர். ஆனால் கடந்த 8 மாதமாக இந்த பிரிவு செயல்படவில்லை. போலீஸ் நிலையங்களில் போலீசார் பற்றாக்குறையாக இருப்பதால் இந்த பிரிவில் இருந்தோர் வழக்கமான பணிக்கு திரும்பி விட்டனர்.

இதனால் மணல் திருட்டை தடுக்கும் பணியில் கடும் தொய்வு ஏற்பட்டு விட்டது. அவ்வப்போது சிலரை மடக்கினாலும் முழுவதுமாக கட்டுப்படுத்த முடியாத நிலை இருக்கிறது. படந்தால், ஓ.மேட்டுப்பட்டியில் தனியார் நிலத்தின் வழியே ஆற்றுக்குள் எந்திரங்களை கொண்டு வந்து ஆழமாக தோண்டி மணலை எடுத்துச்செல்லும் நிலை நீடிக்கிறது.

எனவே மணல் திருட்டை தடுக்க சிறப்பு பிரிவு அமைத்து இரவு பகலாக கண்காணிக்க மாவட்ட போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகமும் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com