வேலை வாய்ப்பு முகாம்

தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்க திட்டத்தின் சார்பில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
வேலை வாய்ப்பு முகாம்
Published on

ஈரோடு,

பெருந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு முகாம் நடத்தப்படுகிறது. இதேபோல் மொடக்குறிச்சி தாலுகாவில் அறச்சலூர் நவரசம் கலை அறிவியல் கல்லூரியில் 19-ந் தேதியும், சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லூரியில் 22-ந் தேதியும், கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 29-ந் தேதியும் முகாம் நடத்தப்படுகிறது.

இதில் 8-ம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2, பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, நர்சிங் படித்த வேலையில்லாத இளைஞர்கள், இளம்பெண்கள் கலந்துகொண்டு பயன்அடையலாம். மேலும் விவரங்களுக்கு ஈரோடு குமலன்குட்டை பூமாலை வணிக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மகளிர் மேம்பாட்டு திட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com