அறநிலையத்துறை சார்பில் புதிய கல்லூரி; ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை - மு.க.ஸ்டாலின் வழங்கினார்

அறநிலையத்துறை சார்பில் தொடங்கப்பட உள்ள புதிய கல்லூரியின் ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
அறநிலையத்துறை சார்பில் புதிய கல்லூரி; ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை - மு.க.ஸ்டாலின் வழங்கினார்
Published on

சென்னை,

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 5 கல்லூரிகள் செயல்பட்டு வரும் நிலையில், புதிதாக மேலும் 10 கல்லூரிகள் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் மானிய கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 4 கல்லூரிக்கு உயர்க்கல்வித் துறையிடம் அனுமதி பெற்றுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்திருந்தார். இதற்கான அரசாணை கடந்த 6 ஆம் தேதி வெளியானது.

அதன்படி சென்னை கொளத்தூரில் எவர் எக்ஸல் பிளாக்கில் ஸ்ரீ கபாலீசுவரர் கலை, அறிவியல் கல்லூரி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பரமத்தி வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கலை, அறிவியல் கல்லூரி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் அம்பளிக்கை என்ற இடத்தில் பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரி, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கலை, அறிவியல் கல்லூரி என்ற பெயர்களில் 4 புதிய கல்லூரிகள் தொடங்கப்படுகின்றன.

இந்த நிலையில் சென்னையில் தொடங்கப்பட உள்ள கபாலீசுவரர் கலை அறிவியல் கல்லூரிக்கு தகுதி, அனுபவம், மதிப்பெண்கள் அடிப்படையில் 9 உதவி பேராசிரியர்கள், ஒரு நூலகர், உடற்கல்வி ஆசிரியர் ஆகியோர் நிபுணர் குழுவால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பணி நியமன ஆணையை வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com