பெரம்பலூர் மாவட்டத்தில் சூப்பர் 30 வகுப்பில் சேர விரும்பும் மாணவ-மாணவிகளுக்கான நுழைவுத்தேர்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் சூப்பர் 30 வகுப்பில் சேர விரும்பும் மாணவ-மாணவிகளுக்கான நுழைவு தேர்வு நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டத்தில் சூப்பர் 30 வகுப்பில் சேர விரும்பும் மாணவ-மாணவிகளுக்கான நுழைவுத்தேர்வு
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளை தமிழகத்தின் சிறந்த மருத்துவ கல்லூரி, அண்ணா பல்கலைக்கழக சிறந்த பொறி யியல் கல்லூரிகள் ஆகியவற்றில் இடம்பெற செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு மருத்துவம்-30, சிறப்பு பொறி யியல்-30, என்ற பெயரில் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு சிறந்த ஆசிரியர்களை கொண்டு சூப்பர்-30 என்ற பெயரில் வகுப்புகள் 2013-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகின்றன.

இவ்வகுப்பில் சேர்ந்து பயில்வதற்காக பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயின்று 10-ம் வகுப்பு பொது தேர்வில் 400-க்கும் மேல் மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்வாகும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் நேற்று பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சூப்பர்-30 வகுப்பிற்கான நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இந்த நுழைவுத்தேர்வில் மொத்தம் 87 மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இந்த நுழைவுத்தேர்வை மாவட்ட கலெக்டர் சாந்தா நேரில் பார்வையிட்டார். அப்போது முதன்மை கல்வி அலுவலர் அருள் மொழிதேவி, பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர் ராஜன், சூப்பர்30 சிறப்பு வகுப்பின் ஒருங்கிணைப் பாளர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com