ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும்

ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும்
Published on

கரூர்,

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க கரூர் மாவட்ட 6-வது மாநாடு தாந்தோணிமலையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் பாலன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் பழனிசாமி, கரூர் மாவட்ட சி.பி.ஐ. செயலாளர் ரத்தினம், மாவட்ட தலைவர் தங்கவேல் ஆகியோர் முன்னிலை விகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. தங்கமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். மாநாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். இந்த திட்டத்தை அனைத்து பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்தி வேலை வழங்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மை திட்ட தூய்மை பணியாளர்களுக்கு நாள் ஊதியம் ரூ.400 வழங்க வேண்டும்.

மேலும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 58 வயதான ஆண், பெண் விவசாய தொழிலாளர்களுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். மனை நிலம் இல்லாத அனைத்து குடும்பங்களுக்கும் 5 சென்ட் வீட்டுமனை வழங்கி, வீடுகட்ட ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்.

அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களால் கட்டி கொடுத்த தொகுப்பு வீடுகள் தற்போது வசிக்க முடியாத அளவிற்கு பழுதடைந்துள்ளது. பழுதடைந்த வீடுகளை அரசாங்கமே கட்டி தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மாநாட்டில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் மாவட்ட பொருளாளர் தங்கராஜ் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com