மண் மாதிரியை பரிசோதித்து பயன்பெறுங்கள்; செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வேண்டுகோள்

செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மண் மாதிரியை பரிசோதித்து பயன்பெறுங்கள்; செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வேண்டுகோள்
Published on

செங்கல்பட்டு மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் நெற்பயிர் அறுவடை செய்து முடிவுற்ற நிலையில் உழவு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் தங்கள் வட்டாரத்தில் தற்சமயம் மண் மாதிரி சேகரிப்பு முகாம்கள் நடந்து வருகிறது. எனவே அந்தந்த வட்டார விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண்மை உதவி அலுவலர்கள், வேளாண்மை அலுவலர், துணை வேளாண்மை அலுவலர், வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை அணுகி மண் மாதிரிகள் மற்றும் நீர் மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பிடவும். இவ்வாறு மண் மற்றும் நீர் மாதிரிகளின் பரிசோதனை முடிவுகளின் கார அமில தன்மை மற்றும் மின் கடத்தல் திறன், தழை, மணி சாம்பல் பரிசோதனை முடிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட அளவில் மட்டும் சொர்ணவாரி பருவத்தில் நெற்பயிர்களுக்கு தங்களின் ஆதார் அட்டை கொண்டு சென்று உரங்களை பெற்று பயிரின் நிலைக்கு ஏற்ப உரங்களை பிரித்து இட கேட்டு கொள்ளப்படுகிறது.

மேலும் தங்கள் பகுதியில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் போதுமான அளவு குறுகியகால ரகங்களான சி.ஓ. 51, என்.எல்.ஆர் 34449, சான்று செய்த நெல் விதைகள் மற்றும் உயிர் உரங்கள் நுணுக்கங்கள் போதுமான அளவு இருப்பில் உள்ளது. மேற்படி விதைகளை விவசாயிகள் மானிய விலையில் பெற்று செம்மை நெல் சாகுபடி செய்து இரட்டிப்பு மகசூல் பெற்று மும்மடங்கு லாபம் அடையுங்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com