தேர்தல் கட்டுப்பாட்டு அறையை அதிகாரிகள் ஆய்வு

தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளர் குல்கர்னி, மாவட்ட தேர்தல் அதிகாரி விஜயலட்சுமி ஆகியோர் பார்வையிட்டனர்.
தேர்தல் கட்டுப்பாட்டு அறையை அதிகாரிகள் ஆய்வு
Published on

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளர் குல்கர்னி, மாவட்ட தேர்தல் அதிகாரி விஜயலட்சுமி ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது மாவட்ட தேர்தல் அதிகாரி கூறியதாவது:-

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல் தொடர்பான புகார் களை 04329-228605, 04329-228606, 04329-228607 என்ற தொலைபேசி எண்களில் பொதுமக்கள் தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்படும் புகார்கள் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு, விசாரணைகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க அரியலூர் மாவட்டத்தில் 8 பறக்கும் படைக் குழுக்கள், 6 நிலையான கண்காணிப்பு குழுக்கள், 4 வீடியோ கண்காணிப்பு குழுக்கள், 2 வீடியோ பார்வைக்குழுக்கள், 2 கணக்கு குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள குழுக்களின் செயல்பாடுகளை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையிலிருந்தே மேற்கண்ட குழுக்கள் எங்கு செல்கின்றன என்பதை நேரடியாக கண்காணித்து பார்வையிடுவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் மீறல் தொடர்பாக வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா மற்றும் விதி மீறல்கள் ஆகியவற்றை பொதுமக்கள் கண்காணித்து cV-I-G-IL செயலி மூலம் போட்டோ அல்லது வீடியோ எடுத்து அனுப்பலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சத்தியநாராயணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயஅருள்பதி, கட்டுப்பாட்டு அறை பொறுப்பு அலுவலர் சரண்யா உள்பட பலர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com